Thursday, 9 October 2014

சர சாஸ்திரம் (வாசியோகம்)

மணி மந்திரம் மருத்துவம் இந்த மூன்று கலைகளிலும் நான் குறிப்பிட்ட பஞ்ச பட்சி, மற்றும் சர சாஸ்திரமும் ஹோரையும் தெரிந்திருந்தால் மட்டுமே  அந்த கலைகளில் முற்றிலும் வல்லவனாக திகழ முடியும் .



சர சாஸ்திரத்தைப் பற்றி "சரம் அறிந்தவனிடம் சரசமாடாதே "என்று கூறுவார்கள் சரசாஸ்திரத்தை பற்றி எல்லோரும் ஒரு பொதுவான விசயங்கள்தான் கொடுத்திருப்பார்கள் ,அதை விட பெரிய சூட்சமங்கள் அதில் அடங்கியுள்ளன .

சர சாஸ்திரம் பொதுவாக எல்லோருக்கும் சித்தியாகாது அந்த அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்காது என்று கூறுவார்கள் .முந்தைய ஜென்மங்களின் பலா பலன்களை வைத்தே இந்த சாஸ்திரம் பலிதம் ஆகும் .

ஜோதிடத்தில் சரம் பார்த்து ஜோதிடம் கூறுவார்கள் ,ஜோதிடம் பார்க்க வரும் பொது என்ன சரம் ஓடுகிறது .அதனுடைய பலாபலன்கள் என்ன வென்று துல்லியமாக கணித்து ஒருவரது இறப்பைக்கூட சரியாக கூறமுடியும் இந்த சாஸ்திரத்தில் .

சர கலையை பற்றி 
  • இடது நாசியில் சுவாசம் நடந்தால் சந்திர கலை 
  • வலதுநாசியில் சுவாசம் நடந்தால்  சூரிய கலை 
  • இரு நாசிகளிலும் சுவாசம் ஓடினால் அது சுழிமுனை 
  • எந்த சுவாசம் ஓடுகின்றதோ அந்த சுவாசத்தை கணக்கில் வைத்து இடதுநாசியில் சுவாசம் ஓடினால் இடது காலை முன் வைத்து சென்றால் சென்ற இடமெல்லாம் வெற்றியாகும் வலது நாசியில் சுவாசம் ஓடும் பொது வலது காலை முன் வைத்து செல்ல வேண்டும் .
  • இரு நாசிகளிலும் சுவாசம் ஓடும் பொது எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது நல்லது .
  • நீங்கள் போன காரியம் தடை ஏற்பட்டால் நான்கு முறை மூச்சைப் மேலும் கீழும் இழுத்து விட்டால் பொது தடை பட்ட காரியங்கள் நடக்கும் .
  • இந்த சரகலை சூதாட்டத்தில் பயன்படுத்துவார்கள் 
  • இந்த சரகலை ஜோதிடத்தில் பயன் படுத்துவார்கள் 
  • இந்த சரத்தை கணிப்பதோடு ஓரையும் அறிந்து செயல் பட்டால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் 

 sara saasthiram ,hora,patsi, 

No comments:

Post a Comment