Friday, 10 October 2014

கண்ணை மறைக்கும் வாதை எனும் தேவதை

எங்கள்  பகுதிகளில் இந்த வாதை  உலவுவதாகவும் அதனால் தான் வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும் .இப்போதும் கூறப்பட்டு வருகிறது .அதை வழிபாடு நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள் 




இதைப்பற்றி முத்துபாண்டி வைத்தியரிடம் கேட்டதற்கு இந்த விசயங்கள் அனைத்தும் உண்மைதான் வாதை எனும் தேவதை உண்மையிலேயே உண்டு அதற்கு தேவையானதை கொடுத்தால் நமக்கு தேவையான வேலைகளை அது செய்யும் .

எங்களது தோட்டம் சுமார் 5 ஏக்கர் சுற்றளவு இருக்கும் அந்த தோட்டத்தை சுற்றி 21 கற்கள் நடப்பட்டு இருக்கும் அந்த கற்கள் எதற்காக நடப்பட்டு இருக்கிறது என்று கேட்டால் அதுதான் வாதை இருந்த இடம் என்று கூறினார்கள் .

எங்கள் தாத்தாவின் அப்பா அவர் பெரிய மாந்திரீகர்தான் அவர் என்ன செய்தார் என்றால் கேரளாவிற்கு சென்று அங்கு உள்ள காணி காரர்கள் என்று கூறுவார்கள் அவர்கள் கேரளாவில் பெரிய மாந்திரிகர்கள் அவர்களிடம் இருந்து 21 வாதைகளை வாங்கி விட்டு அங்கிருந்தே நடந்து மேளம் அடித்து கொண்டே கொண்டு வந்து விட்டார் அதை எங்களது தோட்டத்தை சுற்றி 21 கற்கள் நட்டு வைத்து அதில் பிரதிஷ்டை செய்து பயன் படுத்தி வந்திருக்கிறார் 

இந்த வாதை தேவதையை ஏன் தோட்டத்தில் வைத்தார் என்றால் திருடர்கள் தோட்டத்திற்கு னுள்ளே வந்து விட்டு வெளியே செல்ல முடியாது ஏனென்றால் வழி தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காது அந்த தோட்டத்தில் இருந்து வெளியே செல்வதற்கான வழி அவரால் கண்டு பிடிக்க முடியாது இப்படி இந்த வாதையானது அவர்களின் கண்ணை மறைத்து விடும் .

அப்போது இந்த  21வாதிகளுக்கும் வாரம் ஒரு முறை கோழி பலியிட்டு படையல் வைத்து பயன் படுத்தி வந்திருக்கிறார் 

இந்த வாதை தான் வாகனங்கள் ஓட்டி செல்லும் பொது திடீர் என்று நம்மை அறியாமல் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம் இந்த வாதை தான் வாகனங்கள் ஓட்டுபவரின் சிந்தையை மயக்கி என்ன நடந்தது என்றே தெரியாத அளவிற்கு செய்து விடும்  .




No comments:

Post a Comment