Thursday, 9 October 2014

வசிய மருந்து (எ ) இடுமருந்து

வசியமருந்து முறையை பயன் படுத்தி அதிகமானோர் வயிற்று பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள் அது எப்படி என்றால் யாராவது வயிறுவலி என்று வந்தாலே அவர் உடம்பில் மருந்து உள்ளது .அதை எடுக்கிறேன் என்று கூறி பணம் வாங்குகின்றனர் .

அதாவது குடலில் ஒட்டிகொண்டிருக்கும் பொருளை குழல் வைத்து உறுஞ்சி எடுப்பது என்பது சாத்தியமா அது சாத்தியமல்ல அதை எடுக்க வேண்டுமானால் தக்க சித்த மருந்து வகைகளை உண்டால் மட்டுமே எடுக்க முடியும் .இல்லைஎன்றால் பேதி மாத்திரை சாப்பிட்டாலும் அது வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன .
http://mantraayantraa.blogspot.com/


உடலில் மருந்து இருக்கிறது என்று கண்டறிவது எப்படி?

உடலில் மருந்து இருந்தால் எப்படி கண்டு பிடிக்க வேண்டுமேன்றால் பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு ஓன்று நாம் அன்றாட உணவில் வைத்து உண்ணும் பாகற்காய் ஓன்று ,மற்றொன்று பாகற்காயின் இலையானது கொஞ்சம் சிறியதாக இருக்கும் அதுதான் மிதி பாகற்காய் அந்த மிதி பாகற்காய் இலையில் சாறு பிழிந்து உள்ளங்கையில் ஊற்றினால் அந்த சாரானது வற்றி விட்டால் அந்த உடலில் மருந்து இருக்கிறது என்று உறுதி செய்து கொள்ளலாம் .அது அப்படியே நீர் போல வற்றாமல் இருந்தால் அந்த உடம்பில் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்.

வசியம் :

இப்போது பொதுவாகவே வசியம் என்றாலே எல்லோரும் இடுமருந்து கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .இந்த இடுமருந்தானது எல்லோருக்கும் வேலை செய்யாது .பலகீனமானவர்களுக்கு அந்த மருந்தானது வேலை செய்யும் 

உடற்பயிற்சி யோகா இப்படி பட்ட பயிற்சி செய்து வருபவர்களுக்கு இம்மருந்து சரியாக வேலை செய்யாது .

அதைப்போல மது அருந்துபவர்களுக்கும் அது வேலை செய்யாது .

இடு மருந்து எவ்வாறு வேலை செய்கிறது ?

இந்த மருந்து தயாரிப்பதற்கு எங்களிடம் பல முறைகள் உள்ளன .அம்மருந்தானது ஒரு சில மூலிகைகளை கொண்டு தயார் செய்யப்படுகிறது அதில் யாருக்கு வசியப்பட வேண்டுமோ ,அவர்களுடைய ஆளுக்கு ,அல்லது மூத்திரம் அல்லது வித்து இவைகளை அம்மருந்தில் கலந்து கொடுக்கும் பொது .இவருடைய வாடை பட்ட உடனேயே எதோ ஒரு மோகம் அவர் மேல் ஏற்பட்டு விடுகிறது .

இது பழைய முறைதான் இந்த முறையை பயன் படுத்திதான் கண்ணவன் உண்ட இலையிலே மனைவியை எச்சில் சாப்பாட்டை சாப்பிட சொல்வார்கள் 
அதுவும் இருவரும் அன்யோன்யமாக வாழத்தான் 


கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,...


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர். .


No comments:

Post a Comment