Tuesday, 7 October 2014

அனுபவ முறை கருங்குட்டி உபாசனை

கருங்குட்டி உபாசனை :

இந்த கருங்குட்டி உபாசனை வைத்திருப்பவர்கள் அவர்கள் நினைத்த காரியத்தை எளிதில் சாதித்து விடலாம் .அவர்களுக்கு எதிரியே இருக்க மாட்டார்கள் .எதிரியை இல்லாமல் செய்து விடும் .

முத்து பாண்டி வைத்தியருடைய தகப்பனார் இந்த கருங்குட்டி உபாசி கொஞ்ச நாட்கள் வைத்திருந்தார் அதற்கு பிறகு இந்த உபாசனையால் தனது தேவைக்காக ஒரு சில காரியத்தை செய்து விட்டு அதன் எதிர் விளைவுகள் நமது குடும்பத்தை தாக்கும் இந்த குட்டியை ஏவல் செய்து விட்டால் அதில் ஒரு சில ஏவல் மறுபடியும் திருப்பி நம்மை வந்து தாக்கும் ,நாம் பலமானவர்களாக இருப்பதனால் நமது குழந்தை குடும்பம் என்று அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அதனால் அவர் இளமைக்காலத்தில் பயன் படுத்தி இருக்கிறார் .ஒரு சில பாதிப்புகளுக்கு பிறகு விட்டுவிட்டார் .


இந்த கருங்குட்டி என்னவெல்லாம் செய்யும் :

இந்த கருங்குட்டி வைத்து ஒரு பொருளை நாம் கையால் தொட்டு விட்டு வந்தால் போதும் அந்த பொருள் அன்று இரவே நம் வீட்டில் இருக்கும் அந்த காலத்தில் களவு செய்வதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் .

அப்போது நெல் அறுவடை செய்து களத்திலே போட்டிருப்பார்கள் அந்த நெல்லில் ஒரு பிடியளவு கையில் எடுத்து வந்தால் இந்த குட்ட்யானது ஒரு மூடை நெல் கொண்டு வந்து கொட்டி விடும் .

இந்த கருங்குட்டியை அந்த காலத்தில் கேரளத்தில் அதிகமானோர் பயன் படுத்தி வந்ததாகவும் அங்கிருந்துதான் வாங்கியதாகவும் கூறினார்கள் .இப்போதும் கூட ஒரு சில இடங்களில் பயன் படுத்தப்பட்டு வருகிறது .தமிழகத்திலும் மலைஜாதியினர் பயன்படுத்துகின்றனர் .இதைவைத்து ஜால வித்தைகள் அனைத்தும் ஆடலாம் .வசியம் பிரவு அழைப்பு வித்தைகளையும் செய்யலாம் .

கேரளத்தில் இந்த குட்டியை வைத்து உபாசனை செய்பவர்கள் ஊர்ப்புறங்களில் வசிப்பதில்லை காடுகளில்தான் வாழகிறார்கள். இதற்கான மந்திர யந்திர பிரயோகங்கள் கூட எட்டில் எழுதப்பட்டிருந்தன.மாந்திரீகத்தில் இந்த கருங்குட்டி நினைத்ததை சாதிக்க பயன்படுகிறது .இதனால் ஜென்ம வினை அதிகரிக்கிறது. இந்த கருங்குட்டி உபாசனையை பயன்படுத்தினால் நிகழ்காலத்தில் நாம் நினைத்த வண்ணம் வளமோடு வாழலாம் . 



No comments:

Post a Comment