Friday, 10 October 2014

யந்திரங்கள் அதன் வகைகள்

யந்திரங்கள் என்று கூறினால் நம்முடைய எண்ணத்தை செயல்படுத்த பயன் படுகின்றது .யந்திரங்கள் பொதுவாக உலோகங்களில் தான் எழுது கிறார்கள்,

அக்காலத்தில் உலோகங்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள்எந்த மரத்திற்கு ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையே கதிர் வீச்சை ஏற்படுத்துகிற சக்தி இருக்கிறது என்று கண்டறிந்து,.

அதில் எது நல்லவை செய்யும் எது தீமைகள் செய்யும் எனது நிறுத்தி வைக்கும் எது வரவழைக்கும் என்று அறிந்து அதற்கான மரங்களை உபயோகப்படுத்தினர் .
http://mantraayantraa.blogspot.in/

அஷ்ட கர்மங்களுக்கான மரங்கள் 

1.      வசியம்  ---------- வில்வ பலகை 
2.      உச்சாடனம்------பலாப்ப்லகை
3.      மோகனம் --------மாம்பலகை 
4.      தம்பனம் ----------ஆலம்பலகை 
5.      ஆகர்சனம் -------தேவதாரு பலகை 
6.      பேதனம் -----------தில்லை பலகை
7.      வித்வேடனம் ----எட்டி பலகை 
8.      மாரணம் -----------அத்திப்பலகை 

இப்போது அஷ்ட கர்மத்திர்கான உலோகங்கள் 

1.      வசியம்  ---------- காரியத்தகடு  

2.      உச்சாடனம்------வெள்ளி தகடு 
3.      மோகனம் --------தங்க தகடு 
4.      தம்பனம் ----------செம்பு தகடு  
5.      ஆகர்சனம் -------வெள்ளி தகடு  
6.      பேதனம் -----------இரும்பு தகடு 
7.      வித்வேடனம் ----குருதது ஓலை 
8.      மாரணம் -----------வெள்ளி தகடு 

இப்படியும் யந்திரங்களை பயன் படுத்தலாம் எல்லா விசயங்களுக்கும் செமு வெள்ளி பொதுவானதாக கருதப்படுகிறது ,ஒவ்வொருவரும் தனக்கு தேவையான யந்திரத்தை வரைந்து உருவேற்றலாம் .

பனை ஓலை குருத்து ஊளையாக பார்த்து எடுத்து யந்திரங்கள் வரையலாம் அதற்கும் அதிகமான மின்சார சக்தி உள்ளது நம்முடைய எண்ணங்களை உடனே நிறைவேற்ற கூடியது .

அதுமட்டும் இல்லாமல் சாதாரண பேப்பரில் கூட பச்சை மையுள்ள பேனாவால் எழுதி உருவேற்றி நமது பாக்கெற்றில் வைத்து கொள்ளலாம் 

விபூதியில் யந்திரம் வரையலாம் ,குங்குமத்தில் வரையலாம் சந்தனத்தில்; வரையலாம் .இப்படி யந்திரங்களை அந்தந்த சமயத்தில் எது கையில் கிடைக்கிறதோ அதில் வரைந்து பல காரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்கள் .
நீரில் மனத்தால் எந்திரம் வரைவார்கள் பாலிலும் வரைவார்கள் .


yantra, mantra, tantra, vasiyam 

No comments:

Post a Comment