Tuesday, 7 October 2014

மாந்திரீக அனுபவங்கள் ஜால வித்தைகள்

இந்த அனுபவங்கள் முத்து பாண்டி  வைத்தியர் அவருடைய தகப்பனார் பாட்டனார் அனுபவங்கள் அறிவுரைகள் கதைகள் நிறைய கூறியிருக்கிறார் .அதை எல்லாம் உங்களிடம் பகிர்ந்தால் ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

நிறைய மாந்திரீகர்கள் அக்காலத்தில் ஒரு சில ஜால வித்தை மட்டுமே படித்து வைத்து விட்டு நிறைய மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் அது எப்படி என்றால் . ஆனால் இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது .
ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அந்த நபரால் இந்த பேயை விரட்ட முடியாது .ஒரு சாதாரண பேயை விரட்டும் சக்தி கூட இந்த ஜால வித்தை காரர்களுக்கு இல்லாமல் போகின்றது .

அதனால் தான் தத்தா அடிக்கடி கூறுவார் ஜால வித்தையெல்லாம் நமக்கு வேண்டாம் அது வேஸ்ட் .


ஜால வித்தைகள் :

ஒருவர் வந்து வீட்டில் அதிகம் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று இந்த மந்திரவாதியிடம் கூறியிருப்பார் .இவர் என்ன செய்வார்.அந்த வீட்டிற்கு சென்று பார்க்க போவார் .வீட்டை பார்த்து விட்டு கூறுவார் .இந்த வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளது .அதை எடுக்க வேண்டும் அப்போது தான் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கும் என்று கூறுவார் .

அவர்களுக்கு பிரச்சனைகள் தீர்ந்தால் போதும் என்று எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்ப்பார் அவரும் பெரிய யாக பூஜை போட வேண்டியிருக்கிறது மற்றும் மயானத்தில் போய் பூஜை போடா வேண்டும் அதனால்  20000 ரூபாய் ஆகும் என்று கூறுவார் .அவர்களும் பயமுடன் சரி உடனே செய்து விடுங்கள் என்று பணம் கொடுப்பார்கள் .

அவர் பூஜைக்கான பொருட்கள் எல்லாம் வாங்கி விட்டு யாகத்திற்கான மர சுள்ளிகளையும் கொண்டு வருவார் அந்த கம்பில் ஒன்றில் ஓட்டை போட்டு அதனுள் இரண்டு யந்திரத் தகடுகளை எழுதி உருட்டி வைத்து விடுவார் 

யாகம் செய்யும் பொது வீட்டுகாரர் இடமே இந்த கம்புகளை யாகத்தில் உங்கள் கைகளால் போடுங்கள் என்று கொடுப்பார் .அவர்களும் போடுவார்கள் அந்த கம்பில் தான் இவர்கள் வைத்த யந்திர தகடு இருக்கிறது என்று வீட்டுகாரர்களுக்கு தெரியாது .கடைசியில் யாகம் முடிந்தது அந்த யாக குண்டத்தில் தேடித் பார்ப்பார்கள் இரண்டு தகடுகள் வெளிவரும் .இதை வீட்டு காரரை அழைத்து இதோ பூஜை செய்து உனக்கு வைத்த செய்வினையை எடுத்து விட்டேன் .இந்த யந்திர தகடுகளை ஆற்றிலோ அல்லது கடலிலோ கொண்டு சேர்க்க வேண்டும் .என்று கூறி தகட்டை கொண்டு செல்வார்கள் .
இப்படித்தான் ஜால வித்தைகளை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் .

ஆகவே ஏமாற வேண்டாம் முறையாக அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் எங்கள் பகுற்ற்ஹியில் உள்ள அனைத்து ஜோதிடர்களுக்கும் நாங்கள்தான் யந்திரத்தகடுகள் வரைந்து உருவேற்றி கொடுக்கிறோம் அது சரியாக வ வேலை செய்கிறது 

நாங்கள் அதிக மாக தனி நபர்களை பார்ப்பதை விட ஜோதிடர்கள் தான் எங்களிடம் அதிகமானோர் பயன் அடைகின்றனர் அவர்களும் நல்ல பெயர் அடைகின்றனர் 


No comments:

Post a Comment