Tuesday, 25 November 2014

துக்கம் விலக மந்திரம்



துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்

துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம். ÷க்ஷமம் வருவது நிஜம்

சௌபாக்கிய லட்சுமி

ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம்,
ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி
அம்மாளை ஜெபிக்கிறேன்.


No comments:

Post a Comment