Thursday, 20 November 2014

ஆண் பெண் பாவை செய்து பிரச்சனைகளை தீர்க்கும் விதம்


பாவையின் வகைகள் :

மெழுகு பொம்மை பாவை 
மாவினால் பாவை செய்தல் 
சுடுகாட்டு சாம்பலினால்  பாவை செய்தல் 
மஞ்சள் கிழங்கினால் பாவை செய்தல் 
களிமண்ணால் பாவை செய்தல் 
மரத்தினால் பாவை செய்தல்

இப்படியாக பாவை இந்த முறைகளில் செய்யப்படுகிறது .இத்தனை வகை பாவை எதற்காக பயன்படுத்தலாம் என்றால் அஷ்ட கர்மங்கள் ஆடவும் ,எதிரிகளின் கரு ஒன்றும் நம் கையில் இல்லாத சூழலில் இந்த பாவை செய்து அதில் அதற்குரிய மந்திர உருக்களை ஏற்றி அவர்கள் வீட்டின் முன் புதைத்தால் அந்த பாவையை தாண்டிய உடன் அவனுக்கு நன்மையோ தீமையோ நடக்கும் .

இந்த முறையினால் பிரச்சனையில் அகப்பட்டவர்கள் நம்மிடம் நேராக வர வேண்டிய கட்டாயம் இல்லை அவர்களுடைய கரு மட்டும் இருந்தால் போதும் அவர்கல்க்குரிய ஏவல் பில்லி சூன்யம் பேய் பிசாசு பிரம்மராட்சசி போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளையும் அந்த நபர் வராமலேயே எழுத்தில் விரட்டி விட முடியும் .

இந்த பாவையினை பயன்படுத்துவது எப்படி என்றால் ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்த வேண்டும் .ஆகவே குருவின் ஆலோசனைப்படி முறை அறிந்து இந்த சூட்சமங்களை தெரிந்து செய்தால் வெற்றி நிச்சயம் ஒரு சில பாவைக்குள் யந்திரங்கள் வைத்தும் பாவை செய்வார்கள் ஒரு சிலவற்றில் அதற்கான மூலிகை வேர்களை பாவையின் வயிறில் வைப்பார்கள் ஒரு சிலவற்றில் ஐங்கோல மை வைப்பார்கள் .ஒவ்வொரு கர்மங்களுக்கும் தனித்தனியான மந்திரங்கள் உண்டு .பொதுவான மந்திரங்கள் உபயோகிக்க கூடாது .

இந்த பாவை வைத்து செய்யப்படும் அஷ்ட கர்மங்கலளான .............

வசியம் 
மோகனம் 
தம்பனம் 
ஆகர்சனம் 
வித்வேஷனம் 
பேதனம் 
உச்சாடனம் 
மாரணம் 
இவைகளை மிகவும் சரியாக செய்து முடிக்க முடியும் ஆனால் இப்போது பலருக்கும் இவ்வகை முறை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை இது அதர்வண வேத முறை என்றும் அகத்தியர் சுவடிகளிலும் இதைப்பற்றி எழுதியிருப்பதாக கூறுகிறார்கள் .


Tuesday, 18 November 2014

உடற்கட்டு மந்திர பிரயோகம்

மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் .



உடற்கட்டு மந்திரம் :

ஓம் உமா மகேஸ்வரன் முன்னிற்க பாதமிரண்டும் பூமி தேவி காக்க ,
கனுக்காலிரண்டும் கணபதி காக்க ,
துடையுமுந்தியும் துர்க்கை காக்க ,
வயிறு மார்பும் வைரவன் காக்க ,
கழுத்தும் புஜமும் கதிர்வேல் காக்க ,
கண்ணும் புருவமும் காளி காக்க ,
முகமும் கபாலமும் மும்மூர்த்தி காக்க,
ஓம் அம் உம் சம் வம் சிவ சிவா 
கட்டு கட்டு என் தேகம் முழுவதும் 
சங்கு சக்கரம் காக்க பகைவரைக்கட்டு ,
பிசாசுகளை கட்டு எதிரிகளை கட்டு ஏவலை கட்டு ,
இந்திரன் முதல் ஈசானயங்கட்டு நான் தொட்ட மந்திரம் நீ தொட்ட மந்திரம் ,
நான் தொட்ட மூலி ,நீ தொட்ட மூலி 
எட்டு திசையும் பதினாறு கோணமும் என் முகமாக 
ஓம் சிவய நம சிவய நம சிவய நம .

இந்த மந்திரத்தை ஓடுகின்ற தண்ணீரில் நின்று கொண்டு 1008 ஜெபித்து விட்டு மறுநாளில் இருந்து பிள்ளையார் பிடித்து வைத்து அருகு சூட்டி அதற்கான அவள் பொறி கடலை படைத்து ஒரு நாளுக்கு 108 வீதம் 11 நாட்கள் ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .இதனால் சர்வ மந்திர சித்தியும் சர்வ மூலிகை சித்தியும் ஆகும் .

இம்மந்திரத்தை சித்தி செய்யாமல் மந்திர பிரயோகம் செய்தால் அதன் அனுபவ முறைகளை  கூறுகின்றேன் .

ஏதாவது இடத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது இந்த உடற்கட்டு போடாமல் பூஜைகள் செய்தால் அந்த போச்சி வெற்றியடையாது .அந்த தேவதைகளுக்கு தேவையான படையல் போடவில்லை என்றால் அது நம்மை தாக்கும் அதன் அறிகுறி அந்த நேரமோ அல்லது மறுநாள் காலையிலோ நமக்கு உழலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டு பிடிக்கலாம் அதனை போக்க அதற்கான உச்சாடன மந்திரம் கொடுத்து அதை விரட்ட வேண்டும் .

இப்படி அனுபவத்தில் பல உள்ளன ஆகவே ஏதாவது புத்தகங்களை படித்து விட்டு மாந்திரீகம் செய்கிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் ஏனென்றால் அந்த மந்திரங்களில் எதிர் விளைவுகள் நமக்கு கிடைக்க இருக்கும் வெற்றிகளை தடை செய்யும் .அதனால் சரியானவர்களிடம் பயின்று பிரயோகம் செய்ய முயலுங்கள் .


Wednesday, 12 November 2014

மலக்குட்டி ஜால வித்தைகள்

மலக்குட்டி என்கிற தேவதையை வசியம் செய்ய அதற்கான தியான மந்திரத்தை ஒரு லக்ஷம் முறை ஜெபம் செய்து சித்தி செய்து கொள்ள வேண்டும் அப்படி செய்த பின்னர்தான் இந்த தேவதையை வைத்து பல எதிரிகளை வெல்லக்கூடிய ஜால வித்தைகளெல்லாம் செய்து எதிரி நம்முடைய காலில் வந்து விழும் நிலைமை ஏற்படும் .



இந்த தேவதைகளை சித்தி செய்துகொண்டால் அதற்கான படையல் தினமும் கொடுக்க வேண்டும் அதுதான் இந்த செயல் பாவமான செயல்தான் ஆனால் நம்மை துன்புறுத்துபவனை நாமும் புத்தி வரும் படி பாடம் புகட்டுவதில் தவறொன்றும் இல்லை .

மலக்குட்டி மந்திரம் :

ஓம் இரீம் வா வா மலக் குட்டி சாத்தான் .

என்று மந்திரத்தை சொல்லி இந்த மந்திரத்தை தகட்டில் எழுதி ராஜ பலியுடன் கூடிய பூஜை செய்து எதிரியின் பெயரையும் சுடுகாட்டு சாம்பலையும் அவனுடைய தலைமுடி ,காலடி மண் ,எதாவது ஒரு கருவையும் தகட்டில் வைத்து கொஞ்சம் மலமும் தட்டில் வைத்து உரு ஜெபித்தால் நம்முடைய எதிரியின் மலங்களை வாரி அடிக்கும் இந்த மலக்குட்டி சாத்தான் .

இந்த மந்திரத்தை பூஜை படையல் படித்தி ஒரு லக்ஷம் தடவை மந்திரம் ஜெபித்தால் சித்திக்கும் அந்த தேவதை நேரில் பிரசன்னமாகி கேட்கும் அப்போது கொஞ்சம் மலத்தை வாரி தகட்டில் வைத்தால் நீ நினைத்த இடத்தில் கொண்டு போடும் எதிரியின் வீடு முழுவதும் மலமாக வாடை வீசும் .


Tuesday, 11 November 2014

வசிய ஜால வித்தை

மலை பிரதேசத்திற்கு சென்றால் தேவாங்கு கிடைக்கும் அங்கு சென்று ஒரு ஆண் தேவாங்கும் பெண் தேவாங்கும் பிடித்து வந்து 40 நாட்கள் வளர்த்து 40 நாளாகிய அன்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு புதிய பாண்டத்திலிட்டு ஓர் ஆற்றங்கரைக்கு சென்று இரண்டு பக்கங்களிலும் தனித்தனியாக காளி தியானம் 108 செய்து தேவாங்கை உயிருடன் தனித்தனியாக பாண்டத்தில் வைத்து  புதைத்து வைக்க வேண்டும் .


பின்பு 40 நாட்கள் கழித்து சென்று ஆண் தேவாங்கு புதைத்து வைத்த இடத்தை தோண்டி பார்த்தால் பெண் தேவாங்கும் அந்த குழியில் உள்ள பாண்டத்தில் வந்து விடும் இப்படி அகப்பட்ட தேவாங்கை எடுத்து காளிக்கு பலி கொடுக்க வேண்டும் 

அதன் பிறகு இந்த பலி கொடுத்த தேவாங்கிலிருந்து குழித்தைலம் இறக்கி அதை ஒரு சிமிழில் பதனம் செய்து வைத்து கொள்ள வேண்டும் மேற்படி தைலத்தை நெற்றியில் திலர்த மிட்டு சென்றால் நீங்கள் எதை வசியம் செய்ய விரும்புகிறீர்களோ அவற்றை வசியம் செய்யலாம் இதனால் மனித வசியம், பெண் வசியம் ,தேவ வசியம் ,சர்வ வசியம் லோக வசியம் என்ற வசிய வகைகள் அனைத்தும் சித்திக்கும் .


குறி சொல்ல மையும் கர்ண எட்சணி தியானம்

குறிசொல்ல மை செய்யும் முறை :


சிறிய நங்கை 
பெரியநங்கை 
அழுகண்ணி ஆனைவணங்கி 
ஆடை ஒட்டி 

இந்த மூலிகைகளுக்கு முறையாக சாப நிவர்த்தி செய்து காப்புக்கட்டி பிடுங்கி வந்து அதன்பின் 

சந்தனம்
ஆந்தை பித்து 
வெள்ளை கெவுளி பித்தும் 

இவையெல்லாம் ஒன்றாய் சேர்த்து காரம்பசுவின் பால் விட்டரைத்து குன்றி மணி அளவிற்கு ஒவ்வொரு குளிகை செய்து நிழலில் உலர்த்தி செப்பு சிமிளிற்குள் வைத்து .கர்ண எட்சணி தியானம் ஓத நடந்த நடக்கிற நிகழ்வுகள் அனைத்தயும் மற்றவர்கள் ஆச்சரியப்படும் படி தெளிவாக கூற முடியும் 

மேற்குறிப்பிட்ட குளிகையை தண்ணீரில் நனைத்து அதை நெற்றியில் திலகமிட்டு குறிசொல்ல வேண்டும் 

கர்ண எட்சணி தியானம் :

அரி ஓம் அங் மங் வங் கர்ண எட்சணி வா வா 
வந்து குரிசொல்லம்மா வந்து என் முன் நில் .

இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டால் அனைத்து குறிகளும் வெட்ட வெளிச்சமாக பளிச்சென்று கூற முடியும்,.


பாதாள மை செய்முறை பிரயோகம்

புதையல் கண்டறிய ,நீர் நிலை கண்டறிய , பாதாள மை ... 

யாரிடமும் இல்லாத மிகவும் சூட்சமமான விஷயத்தை இந்த பதிவில் வெளியிட உள்ளேன் .இந்த மை பிரயோகம் தமிழகத்தில் ஓரிருவரிடம் மட்டும் தான் தெரிந்திருக்கும் அவர்களும் கேரளம் சென்று வித்தை கற்றவர்களுக்கு மட்டும் தான் இவ்வகை சாத்தியம் .



பாதாள மை செய்முறை :

ஐம்பது குளித்தவளை  எடுத்து அதை நிழலில் உலர்த்தி அதிலிருந்து தைலம் எடுத்து வசியத்திற்கு பயன்படுத்தப்படும் பாதாள மூலயில் சமூலம் பிடுங்கி அதை சுள்ளியில் வைத்து கருக்கி அண்டங்காக்கையின்  கண்ணும் சேர்த்து அதனுடன் அஞ்சனக்கல் சேர்த்து .ஆழமான கிணற்றில் பாலம் அமைத்து அதிலிருந்து அரைத்து சிமிழில் வைத்து கொண்டு அஞ்சனா தேவி பூஜை செய்ய வேண்டும் .அஞ்சனா தேவி மந்திரத்தை ஜெபித்து உள்ளங்கையில் மையை தடவி பார்த்தால் பாதாளத்தில் உள்ள அனைத்தும் தெள்ள தெளிவாக தெரியும் .

அஞ்சனா தேவி மந்திரம் :

"அங் ரிங் உம் மம் மும் ரம் றீம் க்லீம் 
அஞ்சனாதேவி விடு விடு திசை திசை ஓம் "

மேற்கூறிய விதமாக மை தயாரித்து செயல்படுத்தினால் தேவர்கள் எப்போதும் உங்களிடமே இருப்பார்கள் .இந்த செய்தியில் எந்த ஒளிவு மறைவும் இல்லை ,இதை முறையாக மாந்திரீகம் பயின்றவர்கள் புத்திசாலிகள் சரியாக செய்து பல சாதனைகள் படிக்கலாம் .


Thursday, 6 November 2014

ஐங்கோல மை பிரயோகம் மற்றும் செய்முறை

அன்பர்களே முதலில் நான் ஒரு பெரிய மாந்திரீக வாதி என்று குறிப்பிடுபவர்கள் இந்த ஐங்கோல மை பிரயோக முறையினை தெரிந்திருக்க வேண்டும் அதை எப்படி பயன் படுத்தி காரியத்தை சாதிக்கலாம் என்ற முழு அறிவு வேண்டும் .


இந்த ஐங்கோல மையினை பொதுவாகவே துர்தேவதைகளை வைத்து ஏவல் செய்வதற்காக பயன் படுத்துகிறார்கள் .இந்த மையானது கேரளாவில் கொல்லம் பகுதியில் ஒரு சில கிராணிகாரர்கள் என்று கூறுவார்கள் அவர்களிடம் வாங்கலாம் .
 இந்த மையை பயன்படுத்தி எதிரியின் ஏவலை  திக் பந்தனம் செய்வதற்கும் சிறு தெய்வங்களை வேலை வாங்குவதற்கும் ஏவல் செய்வதற்கும் செய்வினைகள் புரிவதற்கும் இந்த மை பயன் படும் .இந்த மை நமது கையில் இருந்தால் மட்டுமே எல்லோரும் கூறும் ஏவல் பில்லி சூன்யம் செய்வினை அனைத்தும் சாத்தியமாகும் எதிரி ஏவி விட்ட தேவதையை கட்டு படுத்தவும் இந்த ஐங்கோல மை பயன்படும் .

ஐங்கோல மை செய்முறை :

இறந்து போன பிணத்தின் நாடியில் கட்டியுள்ள நாடிக்கட்டு துணி ,கையில் கட்டியுள்ள கைகட்டுதுணி ,கால் கட்டுத்துணி , வில் போட்ட வாய்க்கரிசி ,பிணத்தின் நெற்றியில் வைத்த சந்தனம் ,போட்டு ,பிணத்தின் கழுத்தில் அணிந்த மாலை ,மண்டை ஓடு ,இவையெல்லாம் சேகரித்து பொடிசெய்து சித்தாமனக்கு எண்ணெய் விட்டு அரைத்து அதிலிருந்து தைலம் இறக்குவார்கள் இதுதான் ஐங்கோல தைலம் மை செய்யும் முறை .

ஐங்கோல மை பிரயோகம் :

இந்த மையை பயன் படுத்திதான் நிறைய பேர் கேரளாவில் ஜால வித்தைகள் காட்டுகிறார்கள் ,இந்தமையை பயன்படுத்தி குறிப்பாக மாடன்மார்கள் என்று கூறப்படும் எட்டு வகை மாடன்மார்களை வேலை வாங்கலாம் நாம் என்ன சொன்னாலும் அது செய்துய் விட்டு வரும் .

துர்தேவதைகளுக்கு பூஜைபோட்டு ஒரு சில யந்திரங்களை இந்த வீட்டில் வைக்க சொன்னால் அந்த யந்திரமானது நாம் கூறிய இடத்திற்கு சென்று விடும் 

இந்த மையை பயன்படுத்தி ஏவல் செய்யலாம் அடுத்து நல்ல வியாபாரம் நடக்கும் இடத்தில் இந்த மையுடன் கொஞ்சம் சுடுகாட்டு சாம்பலை சேர்த்து வியாபாரம் நடக்கும் இடத்தில் தூவி விட்டால் வியாபாரம் நடக்காமல் முடங்கி போய் விடும் .தாண்டு என்று கூறப்படுகிற முறை அதாவது ஒரு சில பூஜைகள் செய்து கருமைதடவி ஒரு சில பொருட்களை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டால் அந்த இடத்தை எதிரி தாண்டியவுடன் அவன் மாண்டுபோவான் .இதுதான் தாண்டு என்று கூறப்படுவது .

இந்த விஷயங்கள் மிகவும் சூட்ஷமா சூட்சம விஷயங்கள் எல்லோரும் தெரிந்துகொள்வதற்காக கூறுகிறேன் ,யாரும் போலிகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக .

எந்த பிரச்சனைகளுக்கும் எங்களிடம் தீர்வுண்டு அதனால் தயங்காமல் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் செய்திகளை அனுப்பவும் .